00.திருப்பணி அறிவித்தல்

திருப்பணி அறிவித்தல்

முருகன் அடியார்கட்கு ,
எதிர் வரும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் வசந்த மண்டபம் ,வைரவர் ,நவக்கிரக பீடம் அமைப்பததற்கான அடிக்கல் நாட்டு விழா வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..அடியார்கள் எல்லோரும் கலந்துகொண்டு தங்கள் கைகளால் ஒவ்வொரு செங்கல்லை எடுத்துக்கொடுத்து இத்திருப்பணியில் பங்குபற்றி ஆண்டவன் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலயநிர்வாகசபையினர்

முருகன் அடியார்கட்கு ,

மேற்படி தங்களுக்கு அறிவித்தபடி வைகாசி மாதம் தொடக்கம் ஆலயதிருப்பணி வேலைகள் ஆரம்பமாகி இனிதே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.05.2015 அன்று அம்மன் ஆலயத்திற்கான திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்று முற்பகல் 11 மணிக்கு அம்மன் ஆலய அடிக்கல்நாட்டு வைபவம் நடைபெறும் .அடியார்கள் எல்லோரும் கலந்துகொண்டு தங்கள் கைகளால் ஒவ்வொரு செங்கல்லை எடுத்துக்கொடுத்து இத்திருப்பணியில் பங்குபற்றி ஆண்டவன் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“திருவே என்செல்வமே இருநிலைமீதில் எளியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேண்டும்”

ஆலயநிர்வாகசபையினர்

முருகன் அடியார்கட்கு ,
எமது ஆலயத்தின் உட் கட்டுமாணத்திருப்பணிகளை வைகாசி மாதத்தில் ஆரம்பிக்க இருக்கின்றோம் என்பதை அடியார்களாகிய உங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அதாவது முறையே விநாயகர்,முருகன்,அம்மன்,நவக்கிரகம் ,வைரவர் ,வசந்தமண்டபம் ஆகியவற்றை
ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரைபடங்கள் மாதிரியே அமைக்கவுள்ளோம்.
எம்பெருமான் முருகப்பெருமானின் கும்பாபிஷேகம் வெகுவிரைவில் சிறப்புற நடைபெற அடியார்களாகிய
தங்களின் நிதியுதவியை வழங்கி முருகப்பெருமானின் திருவருட்கடாட்சத்தை பெற்றுய்யுமாறு அன்புடன்
வேண்டுகின்றோம் .
இத்திருப்பணிக்காலத்தில் தங்களின் சரியைத்தொண்டு முருகப்பெருமானுக்கு மிகவும் இன்றியமையாததாகும் .
“தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே”
நன்றி
ஆலயநிர்வாகசபையினர்